ராம நாமமே கல்கண்டு!

Posted By: Admin, 30 Nov -0001.

பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீராமாயணமும், மகாபாரதமும். ஸ்ரீராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம். ஒரு அட்சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்டது ஸ்ரீராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணடையச் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ்விதமான துன்பங்களும் கிடையாது. அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெருமானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து. அந்தக் கருத்து எல்லோருக்கும் புரிய வேண்டும் ...