ஆணையிற் கிளந்த மறைமொழி
Posted By: Admin, 30 Nov -0001.
‘மந்திரம் வலிமையானது’ என்கிறார் பாரதியார். மந்திரம் என்றால் என்ன? “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்று மந்திரத்துக்கு இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம். “நிறைமொழி மாந்தர்” என்பவர்கள் இறைத்தூதர்கள், இறையருள் பெற்ற சான்றோர்கள் ஆவர். “ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது இறைவனால் அருளப்பட்ட வேதம் அல்லது வேத வழிகாட்டுதல்கள். வேதத்தின் சொல் என்பது வேத வித்தாகிய இறைவனின் திருவாக்குகள். இறைவனின் திருவாக்குகளுக்கு வலிமை இல்லாமல் போகுமா என்ன? நபிகளார்(ஸல்)அவர்கள் நாம் அன்றாடம் ஓத வேண்டிய வேத மந்திரங்களை நமக்குக் கற்றுத் ...